மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ரஜினியுடன் சிம்ரன் நடிக்கலாம் நான் நைக கூடாதா" வருத்தம் தெரிவித்த நடிகை மதுபாலா..
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்து பிரபலமானவர் மதுபாலா. தென்னிந்தியாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள மதுபாலா, மலையாளத்தில் தான் முதலில் அறிமுகமானார்.
தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் "அழகன்" திரைப்படத்தில் கீதா, பானுப்ரியா ஆகியோருடன் மதுபாலாவும் அறிமுகமானார். 1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக "ரோஜா" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அப்போது முன்னணியில் இருந்த பல நடிகைகளுக்கும் இப்போது வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று அப்போதைய நடிகைகள் பலரும் கூறி வரும் நிலையில், மதுபாலாவும் இது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர், "எனக்கு இப்போதும் நடிக்க ஆசை இருக்கிறது.
நான் பல மொழிகளிலும் நடித்திருந்தாலும், இன்னும் ஒரு படம் கூட ரஜினி சாருடன் நடிக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. என் காலக்கட்டத்தில் வந்த சிம்ரன் கூட ரஜினிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துவிட்டார். அவரே நடிக்கும்போது நான் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க கூடாதா?" என்று கேட்டுள்ளார்.