மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேற லெவல் நீங்க.. பிறந்தநாளன்று நடிகை மகாலட்சுமி எடுத்த அசத்தலான முடிவு.! குவியும் பாராட்டுக்கள்!!
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ஏராளமான சீரியல்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை மகாலட்சுமி கடந்த ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால் அவர்கள் இருவரும் பல விமர்சனங்களை சந்தித்தனர். ஆனாலும் அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர். மேலும் தாங்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் அவர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் மகாலட்சுமி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் அவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனது பிறந்த நாளில் என்னால் முடிந்த விலைமதிப்பற்ற பரிசை வழங்க முடிவு செய்துள்ளேன். இறந்த பிறகு எனது உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன். இதன் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். நான் மறைந்த பிறகும் எனது உறுப்புகள் மற்றவர்களின் வடிவத்தில் வாழும் என தெரிவித்துள்ளார்.