மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென பிரபல தயாரிப்பாளருடன் நடந்த இரண்டாவது திருமணம்! உருக்கமாக நடிகை மஹாலட்சுமி வெளியிட்ட பதிவு!!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக தனது கேரியரை துவங்கியவர் மஹாலட்சுமி. அதனைத் தொடர்ந்து அவர் சன் டிவியில் அரசி தொடரில் நடித்ததன் மூலம் சீரியலில் காலடி பதித்தார். பின்னர் பல முன்னணி தொலைக்காட்சிகளிலும் ஏராளமான சீரியல்களில் நடித்து அவர் மக்களிடையே பெருமளவில் பிரபலமாகியுள்ளார்.
நடிகை மஹாலட்சுமிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். ஆனால் அவர் கணவருடன் விவாகரத்து பெற்றுள்ளார். இதற்கிடையில் அவர் தேவதையை கண்டேன் என்ற தொடரில் நடித்தபோது நடிகர் ஈஸ்வருடன் கள்ளஉறவில் இருப்பதாக அவரது மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்து பெரும் சர்ச்சை கிளம்பியது. மஹாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை மஹாலட்சுமிக்கு தற்போது எந்த முன்னறிவிப்புமின்றி தயாரிப்பாளர் ரவீந்திரனுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நடிகை மகாலட்சுமி, என் வாழ்க்கையில் நீங்கள் கிடைத்திருக்கீர்கள். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி... உங்கள் அன்பினால் என் வாழ்க்கையை நிரப்புகிறீர்கள். லவ் யூ அம்மு என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.