மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு ஹீரோயின் தனியா இருந்தா போதுமே.. தீயாய் பரவிய வதந்தி.! நடிகை மீனா கொடுத்த தரமான பதிலடி!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் நடிகை மீனா. சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் பின்னர் ஹீரோயினாக அவதாரம் எடுத்து பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்தார். இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு காலமானார்.
இந்த நிலையில் நடிகை மீனா பிரபல நடிகர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இதற்கு பேட்டி ஒன்றில் நடிகை மீனா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, ஒரு ஹீரோ தனியாக இருந்தால் அவதூறான வதந்திகளை பரப்புவதில்லை. அதுவே ஒரு ஹீரோயின் தனியாக இருந்தால் மட்டும் அவரை கீழ்தரமாக பேசுகின்றனர்.
எத்தனையோ பேர் கணவரை இழந்து தனியாக உள்ளனர். பெண்களால் தனியாக வாழ முடியும். எனக்கு இரண்டாவது திருமணம் குறித்து எந்த யோசனையும் கிடையாது. தற்போது எனது முழு கவனமும் என் மகள் நைனிகா மீதுதான் உள்ளது என கூறியுள்ளார்.