மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் விஜய்யுடன் நடித்த நடிகை மீனாவின் மகளா இது? புகைப்படத்தை பார்த்து ஆச்சர்யமடையும் ரசிகர்கள்!
நடிகை மீனா தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் பிரபல நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படமாகும். 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார்.
பல முன்னணி நடிகர்களுடன் நடித்த மீனா கடந்த 2009ம் ஆண்டில் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
மீனாவின் குழந்தையை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். தாயைப் போலவே குழந்தை நட்சத்திரமாக விஜய்யுடன் தெறி படத்தில் மகளாக நடித்திருந்தார். அந்த படத்தில் மீனாவின் மகள் நைனிகவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
தற்போதைய நைனிகாவின் புகைப்படத்தை மீனா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பொழுது குட்டிப்பெண்ணாக நடித்திருந்த நைனிகா தற்போது இப்படி மாறிவிட்டார் என ராசிபார்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.