மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை மீனாவின் மகள், தெறி பேபி நைனிகாவா இது! முக்கிய பிரபலத்துடன் வெளியான புகைப்படம்! செம ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி
பறந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவரது முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளிவந்த நெஞ்சங்கள் என்ற திரைப்படமாகும். அதனைத் தொடர்ந்து அவர் கதாநாயகியாகி 15 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மீனா, கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. நைனிகா சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய்யுடன் இணைந்து தெறி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதில் விஜய்க்கு மகளாக நைனிகா ரசித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானது. மேலும் நைனிகாவின் நடிப்பு அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து நைனிகா அரவிந்த் சாமி மற்றும் அமலாபால் நடிப்பில் வெளிவந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற திரைப்படத்தில் அமலாபாலுக்கு மகளாக நடித்திருந்தார். இந்நிலையில் நைனிகா சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நைனிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் தெறி படத்தில் நடித்த நைனிகாவா இது இப்படி வளர்ந்துவிட்டாரே என பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.