மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கணவர் இறந்தபிறகு என்னை தவறாக தொடர்புபடுத்தி பேசுகின்றனர்" கண்கலங்கிய மீனா.!?
தமிழ் சினிமாவில் கண்ணழகியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.
மேலும் இவர் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பல நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அவருக்கே கதாநாயகியாகவும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான முத்து திரைப்படம் ஜப்பானில் மிகப்பெரும் வெற்றி அடைந்ததையடுத்து உலகளவில் இவருக்கு ரசிகர் கூட்டங்கள் அதிகமாகியுள்ளது.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்தபோதே திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இது போன்ற நிலையில் சமீபத்தில் இவரின் கணவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். இச்செய்தி திரை பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் பெண்களைக் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, "இன்றைய நடிகைகளை பார்த்தால் பாவமாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் பல தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். 50 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் என்னை போன்றவர்களை பற்றியே சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புகிறார்கள். தவறாக தொடர்பு படுத்தி பேசுகிறார்கள். இன்றைய நடிகைகளை விட்டு வைப்பார்களா என்று கோபமாகவும், மனம் வருந்தியும் பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.