திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மீண்டும் கைதாகிறார் மீராமீதுன்... தலைமறைவான நடிகைக்கு வலைவீசிய காவல்துறை.. அதிரடி சம்பவம்.!
![Actress Meera Mithun Getting Jail](https://cdn.tamilspark.com/large/large_meera-mithun-46842.png)
பிரபல நடிகை மீராமிதுன் மீது தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டது. இதனால் அவர் மீதும், அவரது நண்பர் ஷாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குபதிவு செய்து கைது செய்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை சென்னையில் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த விசாரணைக்கு மீராமிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக கோர்ட் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில், வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மீராமிதுன் ஆஜராகாமல் அவரது நண்பர் சாம் அபிஷேக் மட்டும் ஆஜரானார். இதனால் போலீஸ் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், 'மீரா மிதுன் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக கூறி, விரைவில் அவரை கைது செய்து ஆஜர்படுத்துவோம்' என்றார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.