மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்போதைக்கு நோ திருமணம்.! ஆனாலும்.. தனுஷ் பட நடிகை செய்துள்ள அந்த விஷயம்.! ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரீன். தொடர்ந்து அவர் தனுஷுடன் பட்டாசு திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். நடிகை மெஹ்ரீன் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது திருமணம், குழந்தைகள் குறித்த எந்த முடிவும் எடுக்காததால் எதிர்காலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தனது கருமுட்டையை உறைய வைத்து பாதுகாத்து வருவதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இதனை செய்வதற்காக கடந்த 2 ஆண்டுகளாக மனதளவில் என்னை தயார் செய்துக்கொண்டேன். தனிப்பட்ட எனது விஷயத்தை பகிரலாமா? வேண்டாமா? என பெரும் யோசனையில் இருந்தேன். ஆனால் எத்தனையோ பெண்கள் என்னைப் போன்று திருமணம் செய்துகொள்வது, குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து எந்த முடிவும் செய்யாமல் இருப்பர். எதிர்காலத்திற்காக உங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலும் வரும்காலத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க எல்லா பெண்களும் இதனை செய்ய வேண்டும் என நான் எண்ணுகிறேன். இது தடை செய்யப்பட்ட விஷயமாக இருப்பதால் இதைப்பற்றி அதிகம் பேசுவதில்லை.
ஆனால் டெக்னாலஜி மூலமாக நம்மால் நமக்காக ஒரு நல்ல முடிவுகளை எடுக்க முடிகிறது. தாயாக வேண்டும் என்பது எனது கனவு. சில வருடங்கள் தாமதம் செய்வதால் அந்த கனவு நிறைவேறாமல் போக நான் விரும்பவில்லை. அதனால்தான் இந்த முடிவு. ஆனால் இது சவால்கள், கஷ்டங்கள் நிறைந்ததாக இருந்தது. நான் ஒவ்வொரு முறை மருத்துவமனைக்கு செல்லும்போதும் மயக்கம் அடைந்தேன். ஆனால் அத்தனை வலிகளும் நிச்சயம் மதிப்பிற்குரியது. நீங்கள் எதைச் செய்யத் தேர்வு செய்தாலும் அதை உங்களுக்காக செய்யுங்கள் என கூறியுள்ளார்.