#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாகினி சீரியல் மௌனி ராய் - தொழிலதிபர் சூரஜ் நம்பியார்... கோவாவில் மலையாள முறைப்படி டும்., டும்., டும்.!
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சீரியலில் நடித்த நடிகைக்கு கோவாவில் திருமணம் நடைபெற்று முடிந்தது.
கடந்த 2015 ஆம் வருடத்தில் இந்தியில் ஒளிபரப்பாகி வந்த நாகினி தொலைக்காட்சி தொடர் மூலமாக பிரபலமானவர் மௌனி ராய். இந்தியில் நாகினி தொடர் அமோக வெற்றி அடைந்த நிலையில், தமிழில் சன் தொலைக்காட்சி மூலமாக டப்பிங் செய்து, தமிழ் மொழியில் ஒளிபரப்பப்பட்டது.
தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்த பல சீரியலையும் பின்னுக்கு தள்ளி மிக விரைவில் டி.ஆர்.பியில் முதல் இடம்பெற்றுள்ள பெற்ற தொடராக நாகினி இருந்தது. அதனைத்தொடர்ந்து, நாகினி 2 தொடரும் தமிழ் மொழியில் ஒளிபரப்பப்பட்டது.
நாகினி சீரியலில் கவர்ச்சியை காட்டுத்தீயாக காண்பித்து இருந்த மௌனி ராய்க்கு பலரும் ரசிகர்களாக மாறினர். குறிப்பாக இளைஞர்களின் அமோக ஆதரவு அதிகரித்து வந்தது. ஆனால், குடும்பமாக அமர்ந்து பார்க்கும் தொடர்களில், கவர்ச்சி வேண்டுமா? என ஒருபுறம் போர்கொடியும் தூக்கப்பட்டன.
மௌனி ராய் கேரளாவை பூர்வீகமாக கொண்ட சூரஜ் நம்பியார் என்ற தொழிலதிபரை காதலித்து வந்துள்ளார். 2 வருடங்களுக்கு முன்னதாகவே இவர்களின் காதல் தொடர்பான புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில், இவர்கள் இருவரின் திருமணமும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கோவாவில் மலையாள முறைப்படி இன்று நடைபெற்று முடிந்தது.
இதனைத்தொடர்ந்து, மௌனி ராய் மேற்கு வங்கம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால், விரைவில் மேற்கு வங்க முறைப்படி திருமணம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மௌனி ராய்க்கு தற்போது 36 வயதாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Watch: #MouniRoy ties the knot with #SurajNambiar in #MalayaliWeddingCeremony #MouniRoywedding #mounikishaadi #WeddingCeremony #Entertainment #EntertainmentNews pic.twitter.com/8yBGpIluGi
— Free Press Journal (@fpjindia) January 27, 2022