#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது.. 90ஸ் கனவுகன்னி நக்மாவிற்கு இப்படியொரு பிரச்சினையா? அவரே வெளியிட்ட தகவலால் செம ஷாக்கில் ரசிகர்கள்!!
நடிகையும், காங்கிரஸ் கட்சியில் முக்கிய நிர்வாகியுமான நக்மா தடுப்பூசி போட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்தவர் நக்மா. இவர் நடிகை ஜோதிகாவின் அக்கா ஆவார். அவருக்கு அப்பொழுது ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் கொஞ்சம் குறைந்திந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவத் துவங்கியுள்ளது. இதற்கிடையில் பலரும் கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அந்த வகையில் நடிகை நக்மாவும் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
Had taken my 1st dose of Vaccine a few days ago tested for Covid-19 yest, my test has come ‘Positive’ so Quarantined myself at home. All Please take care and take al necessary precautions even after taking the 1st dose of Vaccine do not get complacent in anyway manner #staysafe !
— Nagma (@nagma_morarji) April 7, 2021
ஆனாலும் அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை நக்மா தனது ட்விட்டர் பக்கத்தில், சில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டேன். ஆனால் எனக்கு தற்போது நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வீட்டிலேயே நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எல்லாவற்றிலும் தயவு செய்து முன்னெச்செரிக்கையாக கவனமாக இருங்கள். தடுப்பூசி போட்டுவிட்டோமே என அலட்சியமாக இருக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.