பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"பயத்துக்கே அவ பயம் காட்டுவா" - நடிகை நயன்தாராவின் ஜவான் பட அட்டகாசமான லுக் வெளியீடு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியா மணி, யோகிபாபு, சஞ்சய் தத், ரியாஸ் கான், சரண்யா மல்கோத்ரா, ரிதி டோக்ரா, பிரியதர்ஷினி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான்.
அட்லீ இயக்கத்தில், ரெட் சில்லிஸ் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில், அனிரூத் ரவிச்சந்தர் இசையில் உருவாகியுள்ள ஜவான் படம், உலகளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
படவெளியீடு பணிகளை யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது. படம் செப்டம்பர் மாதம் 7ம் தேதி உலகளவில் வெளியாகிறது. படத்தின் டிரைலர் அதன் மீதான எதிர்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நடிகை நயன்தாராவின் அசத்தல் புகைப்படம் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவர் துப்பாக்கியை கைகளில் ஏந்தியவாறு இருக்கிறார். அவருக்கு பயத்தை கண்டு அவள் அச்சப்படமாட்டால் என்பதை போல வசனம் கொடுக்கப்பட்டுள்ளது.