நடிகர்களை ஓரம்கட்டிய நயன்தாரா! ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?



Actress nayanthara new salary leaked

ஒருகாலத்தில் சர்ச்சைகளுக்கு பெயர்போன நாயகியாக இருந்தவர் நயன்தாரா. சிம்பு, பிரபுதேவாவுடனான காதல் கிசுகிசுக்கள், காதல் தோல்வி சர்ச்சைகள் போன்றவை அவரை சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் அதையெல்லாம் மனதில் போட்டுக்கொள்ளாமல் மீண்டும் நடிக்கவந்து இன்று லேடி சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் நடிகை நயன் தாரா.

தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் கொடி கட்டி பறக்கும் அவரது கால்ஷீட்டுக்கு பெரிய கதாநாயகர்கள் காத்து இருக்கிறார்கள். சமீபத்தில் திரைக்கு வந்த நயன்தாராவின் படங்கள் அனைத்துமே நல்ல வசூல் பார்த்துள்ளன.

nayanthara

தற்போது நானும் ரௌடிதான் திரைப்படத்தில் நடிக்கும்போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதலால் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் தனது படங்கள் அனைத்தும் வெற்றிபெறுவதால் சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஸ்வாசம், கொலையுதிர் காலம், தெலுங்கில் சைமா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் மட்டும் தற்போது நடித்துவருகிறார் நயன்தாரா.