#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"லேடி சூப்பர்ஸ்டார் பட்டமே வேணாம்., எல்லாரும் திட்டுறாங்க" - நடிகை நயன்தாரா.!
தமிழில் ஐயா திரைப்படம் மூலமாக அறிமுகமாகி மிகப்பெரிய நடிகையாக உருவானவர் நயன்தாரா. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே தமிழகத்தில் இருக்கின்றது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் திரைப்படங்களில் நடித்துவரும் நயன்தாரா, அன்னபூரணி என்ற படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திரையரங்கில் வெளியான நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டது. அப்போது நயன்தாரா பேசுகையில், "நான் இதற்கு முன்பு செய்த பல விஷயங்களை சரி செய்து தற்போது ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளேன்.
ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற விஷயம் இன்று வரை மாறாமல் இருக்கிறது. அவ்வாறு கூறினால் பலரும் திட்டுகிறார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தாலும், படத்தில் எனக்கே தெரியாமல் இறுதியில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற விஷயத்தை இணைத்துள்ளனர்" எனக்கு கூறினார்.