அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
"என் எழுச்சிக்கு காரணம் நீங்கள் தான்; என்னை இயக்கும் சக்தி" - நன்றி தெரிவித்த நயன்தாரா.!!
தமிழ் திரையுலகில் சரத்குமாருடன் ஐயா, ரஜினிகாந்துடன் சந்திரமுகி என ஒரே வாரத்தில் இரண்டு மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர்ஸ்டார் எனவும் ரசிகர்களால் அறியப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கதாநாயகியாக நடித்து வந்த நயன்தாரா, தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் திரையுலகிற்கு அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகை நயன்தாரா, "இவ்வளவு ஆண்டுகள் சினிமாவில் இருப்பதற்கும், நான் விழும்போது எழுவதற்கும் காரணமாக இருந்தது முழுக்க முழுக்க ரசிகர்கள் தான்.
அவர்களுக்கு மிக்க நன்றி. தன்னை இயக்கும் சக்தியே நீங்கள் தான். நான் எனது வாழ்வில் இந்த மயில்கல்லை அடைவதற்கு ஊன்று சக்தியாக இருந்து என்னை வடிவமைத்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.