மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நயன் - விக்கி ஒரு பைசா செலவில்லாமல் ஓசியிலேயே ஹனிமூன் போயிருக்கங்களா?.! இதான் விஷயமா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்களும் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்தபின் நயன் மற்றும் விக்கி இருவரும் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றிருந்த நிலையில், நயன்தாரா படத்தில் நடிப்பதற்காக மீண்டும் இந்தியா திரும்பினர். அத்துடன் நயன்தாரா ஜவான் ஷூட்டிங் சென்ற நிலையில், விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியா விழா ஏற்பாடுகளை செய்தார்.
இதன் பிறகு இருவரும் தற்போது இரண்டாவது ஹனிமூனிற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்கின்றனர். அங்கு தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதால் அது வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து இரண்டாவது ஹனிமூன் செலவையும் நெட்பிலிக்ஸ நிறுவனம் ஏற்றுக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது இதன் காரணமாகவே இருவரும் ஒரு பைசா செலவிடாமல் ஹனிமூன் சென்று இருக்கின்றனர்.
முன்பே நெட்பிளிக்ஸ் நிறுவனம் திருமண செலவை ஏற்றுக்கொண்ட நிலையில், தற்போது ஹனிமூன் செலவையும் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் இத்தகவல் உண்மையா? பொய்யா? என்பது தெரியவில்லை.