மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகைகள் நித்யாமேனன், பார்வதி கர்ப்பத்திற்கு காரணம் இவர்தானாம்.. வெளியான பகீர் உண்மை..!!
மோலிவுட் திரையுலகில் அனுமான் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ஆகாஷ கோபுரம் படத்தில் நாயகியாக அறிமுகமானார். இதன் பின்னர் தமிழில் காஞ்சனா, வெப்பம், மெர்சல், ஓ காதல் கண்மணி போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருந்தார்,
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் பான் இந்தியா ஸ்டார் ஆகியுள்ள நித்யா மேனன், நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பதறவைத்தார்.
அதில் பிரக்னன்சி பாசிட்டிவ் கிட் போட்டோவை ஷேர் செய்திருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் திருமணம் ஆகாமலே குழந்தையா?, கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்று கமெண்ட்களை பதிவிட்டு வந்த நிலையில், மலையாள நடிகை பார்வதி பத்மபிரியாவும் கர்ப்பம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதன் பின்பு தான் ரசிகர்கள் அவர் கர்ப்பமாக இல்லை. இது விளம்பரத்திற்காக பதிவிட்ட புகைப்படம் என்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
இந்நிலையில், கர்ப்பத்திற்கான காரணம் இயக்குனர் அஞ்சலி மேனன் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அஞ்சலி மேனன் இயக்கத்தில் நித்யா மேனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் wonder women. கர்ப்பமாக இருக்கும் சில பெண்களை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டுள்ளதால், வித்தியாசமான முறையில் படத்தை விளம்பரம் செய்ய இப்படி பிரக்னன்சி கிட் புகைப்படத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது.