#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"என் முதல் திருமண முறிவுக்கு காரணம் குடி தான் " மனம் திறந்த நடிகை ஊர்வசி.!
90களில் தமிழில் முன்னணி நடிகையாக இருந்து, பிரபு, மோகன், சத்யராஜ், கமல் ஆகியோருடன் நடித்தவர் ஊர்வசி. கேரளாவைச் சேர்ந்த இவர், மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் பாக்கியராஜ் இயக்கிய 'முந்தானை முடிச்சு' படத்தில் அறிமுகமானார். அந்த முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் ஊர்வசி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2000ம் ஆண்டு மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வேறு திருமணம் செய்துகொண்டனர்.
சமீபத்தில் அவரளித்த பேட்டியில், "திருமணத்திற்கு பின் மனோஜ் கே ஜெயன் குடும்பத்தில் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தேன். அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தான் குடிப்பார்கள். இதனால் நான் குடிக்கு அடிமையாகிவிட்டேன். இதுவே நாங்கள் பிரியக் காரணமாகிவிட்டது' என்றார்.