திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகையின் அம்மா காலில் விழுந்த ரஜினி.! நடிகை சொன்ன ரகசியம்.!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்று சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. ஆரம்பகாலங்களில் பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்த அவர், மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
திரைக்கல்லூரியில் சேர்ந்து நடிப்பை கற்றுக்கொண்ட ரஜினி, இயக்குனர் கே பாலச்சந்தர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர். ஆனால், ஆரம்பகாலங்களில் நிறைய அவமானங்களையும், உருவகேலிகளையும் சந்தித்த ரஜினி, தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக உள்ளார்.
இதுவரை 169 படங்களில் நடித்திருக்கும் ரஜினிக்கு, அவரது சமீபத்திய படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. சில வாரங்களுக்கு முன் வெளியான 'ஜெயிலர்' படத்தின் மூலம் தான் சூப்பர்ஸ்டார் என்று மீண்டும் நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஹீமா சௌத்திரி, "ரஜினியும், நானும் திரைக்கல்லூரியில் ஒன்றாக படித்தோம். அப்போதே நங்கள் நல்ல நண்பர்கள். அவருக்கு முன்பே எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிட்டது. ரஜினிக்கு வாய்ப்பு வந்தபோது, நள்ளிரவில் என் வீட்டிற்கு வந்து என் அம்மாவின் காலில் விழுந்து ஆசை வாங்கி சென்றார்" என்று ஹீமா சௌத்திரி கூறியுள்ளார்.