மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நோ சொல்லவில்லை என்றால், பாலியல் அத்துமீறல் நடக்கத்தான் செய்யும்" நடிகை ஓவியாவின் சர்ச்சையான பேச்சு.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஓவியா. இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், களவாணி திரைப்படம் ரசிகர்கள் மனதில் பெரிதும் இடம் பிடித்தது.
சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு நடிகையாக ஜொலிக்காவிட்டாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருவராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் இவரின் தைரியமான பேச்சு, குழந்தைத்தனமான நடவடிக்கையும் ரசிகர்களை கவர்ந்து ஓவியா ஆர்மி என்ற முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது இவருக்குத்தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்பு போட்டியாளர்கள் பலருக்கும் பட வாய்ப்புகள் வரும். ஆனால் ஓவியா எந்த படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் இவருக்கு தமிழ் சினிமாவில் தற்போது கைவசம் எந்த படங்களும் இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில் சமீபத்தில் இவர் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், "சினிமாவில் பாலியல் அத்துமீறல்கள் நடக்கத்தான் செய்கிறது. இதை தடுக்க முடியவில்லை. ஆனால் ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் கண்டிப்பாக நோ சொல்ல வேண்டும். அப்படி சொல்லவில்லை" என்று தைரியமாக பேசியிருந்தார். இப்பேச்சுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.