#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதெல்லாம் சுத்த வதந்தி.! உண்மையை உடைத்த காற்றுக்கென்ன வேலி சீரியல் ஹீரோயின்! என்ன விஷயம் தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த தொடர் காற்றுக்கென்ன வேலி. இந்த தொடரில் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்தவர் தர்ஷன்.
ஒரு சில காரணங்களால் அவர் அந்த தொடரில் விட்டு விலகிய நிலையில் தற்போது ஹீரோவாக கன்னட நடிகர் சுவாமிநாதன் என்பவர் நடித்து வருகிறார். மேலும் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோயினாக வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரியங்கா குமார். இந்நிலையில் சமீபத்தில் அவரும் படத்தில் நடிக்கவிருப்பதால் தொடரில் இருந்து விலகியதாக தகவல்கள் பரவி வந்தது.
இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்து அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் எந்த தகவலும் அளிக்காத நிலையில் இதுபோன்ற வதந்திகள் பரவி வருவது மனமுடைய வைத்துள்ளது. நான் காற்றுக்கென்ன வேலி தொடரில் இருந்து விலகவில்லை. என் மீது அன்பு கொண்டு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றி என கூறியுள்ளார்.