மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு காலகட்டத்தில் சினிமாவையே கலக்கிய ராதா தற்போது என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா! வாயடைத்துப்போன ரசிகர்கள்!
1980 மற்றும் 90களில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராதா. அவர் முன்னணி நடிகை அம்பிகாவின் சகோதரி ஆவார். ராதா கமல் ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ராதா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியின் நடுவராகவும் பொறுப்பேற்றிருந்தார். நடிகை 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர். மேலும் மகள்கள் கார்த்திகா துளசி இருவரும் சில திரைப் படங்களில் நடித்துள்ளனர். ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
நடிகை ராதாவிற்கு மும்பையில் உணவு விடுதிகள் உள்ளது. மேலும் கேரளாவில் Uday Samudra Leisure Beach Hotel & Spa, Uday Suites - The Garden Hotel, Uday Backwater Resort’ என மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளது. மேலும் இங்கிலாந்தில் "ராக் அன் ரோல் கிச்சன்" (RRK) என்ற ஒரு உணவகமும் உள்ளது.
அது மட்டுமின்றி அவருக்கு சாய் கிருஷ்ணா என்ற பள்ளியும், சினிமா தியேட்டர் மற்றும் சென்னையில் உணவு விடுதியும் உள்ளது. இவருக்கு கீழ் 4000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தனக்கு பின்னர் தனது பிள்ளைகள் இத்தகைய தொழிலை எடுத்து சிறப்பாக நடத்த வேண்டும் என்பது ராதாவின் ஆசையாக உள்ளது.