மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகையின் மகளா இது.. வைரலான புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
80ல் தமிழ் திரையுலகில் கொடி கட்டிபறந்த நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா. இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அக்கால கட்டத்தில் இவர்கள் இருவரும் ரஜினி, கமல், சிவாஜி, சத்யராஜ், பிரபு என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளனர்.
இவர்களில் ராதாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருமே சினிமாவில் நடித்து வருகின்றனர். ராதாவின் மூத்த மகள் கார்த்திகா, ஜீவாவுக்கு ஜோடியாக 'கோ' படத்திலும், இளைய மகள் கெளதம் கார்த்திக் ஜோடியாக 'கடல்' படத்திலும் நடித்திருந்தனர்.
மேற்கண்ட இரண்டு படங்களுமே மிகப்பெரிய ஹிட்டான படங்கள் என்றாலும், இருவருக்கும் தொடர்ந்து பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. முன்னணி நடிகையாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இருவரும் தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்கள்.
இந்நிலையில், கார்த்திகாவின் குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், "அட.. நம்ம 'கோ' படத்தில் நடித்த காத்திகாவா இது?" என்று ஆச்சர்யத்துடன் பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.