வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி இந்த பிரபல நடிகையா? உற்சாகத்தில் தல ரசிகர்கள்.



Actress rahul preet joins with ajith in valimai

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களின் வெற்றியை அடுத்து இயக்குனர் வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடிக்க உள்ளார் அஜித். வலிமை படத்தில் அஜித் காவல் துறை அதிகாரியாக நடிக்க இருப்பதால் தனது உடல் எடையை குறைத்து கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் மாற அஜித் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்க உள்ளார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளிவராத நிலையில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்கவைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

Valimai

தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் வினோத் இயக்கிய தீரன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் நடித்திருந்தார். இந்த பேச்சுவார்த்தை உறுதியானால் அஜித் - ரகுல் ஜோடி சேர்வது இதுவே முதல் முறையாகும்.