#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா.. என்னம்மா ஆட்டம் இது! ராய் லட்சுமியின் வீடியோவை கண்டு கிறங்கிப் போன ரசிகர்கள்!
தமிழ்சினிமாவில் விக்ராந்த் நடிப்பில் வெளிவந்த கற்க கசடற என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் வந்த நிலையில் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. பின்னர் ஸ்ரீகாந்துடன் அவர் நடித்த சவுகார்பேட்டை திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
இந்தநிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் பிஸியாக இருந்த ராய் லட்சுமி உடல் எடையை குறைத்து அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது பெல்லி நடனம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் தீயாய் வைரலாகி வருகிறது.