ஆத்தி!! இது முரட்டு தனமான ஒர்கவுட்டால இருக்கு!! ஜிம் உடையில் ஜம்னு புகைப்படம் வெளியிட்ட ராய் லட்சுமி!! வைரல் புகைப்படம்..



actress-rai-lakshmi-latest-workout-photos

நடிகை ராய் லட்சுமியின் ஒர்கவுட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராய் லட்சுமி. விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், ஜெயம் ரவியின் தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருப்பினும் அம்மணியால் முன்னணி நாயகியாக வர வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கும் ஒருசில படங்களில் நடித்து தனது மவுசை ஏற்றினார்.

raai lakshmi

தற்போது பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளங்களில் கதியாக கிடக்கும் அம்மணி, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில், மிகவும் வித்தியாசமாக, அந்தரத்தில் தொங்கியபடி ஒர்கவுட் செய்யும் சில புகைப்படங்களை அவர் வெளியிட, தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.