குடும்பத்துடன் கொலை செய்திடுவேன் - பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.!
ஆத்தி.. என்னங்க அதுகூட இப்படி நிக்குறிங்க?.. ராய்லட்சுமியின் ராக்கிங் போட்டோ..!!
தமிழ் திரையுலகில் "கற்க கசடற" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. இந்த படத்தினை தொடர்ந்து தமிழில் பல படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமின்றி கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான தாம் தூம் படத்தின் மூலமாக ராய் லட்சுமி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றார். இதன்பின் கடந்த 2011 ஆம் ஆண்டு தல அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சிண்ட்ரெல்லா. இவர் தற்போது தமிழில் கேங்ஸ்டர் 21 என்ற படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் நடிகை ராய்லட்சுமி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.
இவருக்கு ஐந்து மில்லியன் பின்தொடர்பாளர்கள் இன்ஸ்டாகிராமில் இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதில் ராய் லட்சுமி சிறிய ரக விமானத்தின் மீது ஏறி அமர்ந்தவாரும், அதன் அருகில் நின்றவாரும் பதிவு செய்துள்ள புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் எதுகை மோனையுடன் பல கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.