மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எனக்கு விவாகரத்து கிடைச்சுருச்சு.. மேளதாளத்துடன் பார்ட்டி! செம குஷியாக குத்தாட்டம் போட்ட சர்ச்சை நடிகை!!
பாலிவுட்டில் பிரபல சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த கம்பீரம் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார். நடிகை ராக்கி சாவந்த் கடந்த 2008 ஆம் ஆண்டு சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் ரித்தேஷ் என்ற வெளிநாட்டு தொழிலதிபரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து அவர் ஆதில் கான் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். அவருக்காக தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும், தனது பெயரை பாத்திமா என மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் திருமணமான ஒரே மாதத்திலேயே ஆதில் கான் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து அதில் கான் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ராக்கி சாவந்த் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் தனக்கு விவாகரத்து கிடைத்ததை செம மகிழ்ச்சியாக ராக்கி சாவந்த் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார். திருமண பெண் போல உடை அணிந்து குஷியாக அவர் குத்தாட்டம் போட்டுள்ளார்.