மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை ரம்பா சென்ற கார் விபத்து... மகனை வீட்டிற்கு அழைத்து வரும் வழியில் பயங்கரம்.. கண்ணீரில் பிரார்த்திக்கும் ரசிகர்கள்..!
பிரபல நடிகை மகனை பள்ளியில் இருந்து காரில் வீட்டிற்கு அழைத்து வரும் போது விபத்தில் சிக்கிவிட, அவர் மகனுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரம்பா. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, போஜ்பூரி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் அடித்துள்ளார்.
தற்போது 46 வயதாகும் நடிகை ரம்பா, தனது கணவர் இந்திரகுமார் பத்மநாதன் மற்றும் 2 மகள் ஒரு மகன் ரித்விக் வம்சியுடன் கனடாவில் வருகின்றார். இந்நிலையில், இவர் தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்த சமயத்தில், அவரின் கார் மற்றொரு கார் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் நடிகை ரம்பா மற்றும் அவரின் மகன் காயமடையவே, இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.