ஆத்தாடி.. நடிகை ரம்யா கிருஷ்ணன் கட்டியிருக்கும் புடவையின் விலை தெரியுமா?.. இத்தனை லட்சமா?.! கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!!
தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பலமொழி படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இதுவரையிலும் 260-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது சினிமா வாழ்க்கையை கடந்த 1985-ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், தற்போது வரை நடித்து வருகிறார். அத்துடன் இவர் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான கிருஷ்ணவம்சி என்பவரை கடந்த 2003-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இணைந்த ரம்யா கிருஷ்ணன், தற்போது மற்றொரு நடன நிகழ்ச்சியிலும் நடுவராக பணியாற்றி வருகிறார். அந்நிகழ்ச்சிக்காக இவர் விலையுயர்ந்த உடையணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
அந்த விலை உயர்ந்த புடவை கிட்டத்தட்ட 1.25 லட்சம் எனக்கூறப்படுகிறது. அதற்கு காரணம் அது ஒரு தூய பட்டு, வெல்வெட் மற்றும் தூய பருத்திப்பட்டு, எம்ராய்டரி டிசைன் கொண்டு செய்யப்பட்டதாம். ரூபி ரெட்டி எம்ராய்டரி ஜார்ஜெட் புடவையாகும்.
இதன் காரணமாகவே விலை உயர்ந்த புடவை என்று கூறப்படுகிறது. இது குறித்த தகவல் உண்மையா? என்பது தெரியவில்லை. இருந்தபோதிலும் புடவையின் விலை உயர்ந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.