மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை ரம்யா பாண்டியனின் வேற லெவல் வைரலாகும் போட்டோ சூட்.! வாயை பிளக்கும் ரசிகர்கள்.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ரம்யா பாண்டியன். இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். குறிப்பாக புடவையில் தன் இடுப்பழகை காட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ரம்யா பாண்டியன்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி, பிக் பாஸ் என்ற இரு ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சின்னத்திரையில் தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளார். சின்னத்திரையில் மட்டுமல்லாது, வெள்ளித் துறையிலும் இவர் நடிப்பில் வெளியான ஜோக்கர் திரைப்படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
இவ்வாறு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் ரம்யா பாண்டியன், தொடர்ந்து போட்டோ ஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இப்புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
குறிப்பாக தற்போது ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமாக போட்டோஷூட் செய்து பதிவிட்டுள்ளார். இதன்படி சேலையில் அளவான கவர்ச்சியோடு புல்வெளியில் படுத்துக்கொண்டு போட்டோஷூட் செய்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படங்கள் சிறிது நேரத்திலேயே அதிக அளவு ஷேர் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.