வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
நம்ம நாட்டாமை டீச்சரா இது.! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே.! வைரல் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ராமராஜன் நடிப்பில் வெளிவந்த வில்லுப்பாட்டுக்காரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராணி. தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் பெருமளவில் வராத நிலையில் அவர் கவர்ச்சிக்கு தாவினார். நடிகை ராணி கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த நாட்டாமை திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப்படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடிய அவர் ஜெமினி படத்தில் விக்ரமுடன் இணைந்து ஓ போடு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். அப்பாடல் பெருமளவில் ஹிட்டானது. மேலும் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் இந்தி பட தயாரிப்பாளரான பிரசாந்த் பூரா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
அவர்களுக்கு தீக்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நடிகை ராணியின் புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் நாட்டாமை டீச்சரா இது! அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.