மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. நடிகை ரோஜாவின் மகனா இது! இப்போ எப்படியிருக்காரு பார்த்தீர்களா!!. வைரலாகும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் பிரஷாந்த் நடிப்பில் வெளிவந்த செம்பருத்தி படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதனை தொடர்ந்து அவர் ரஜினி, சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார்.
ரோஜா தற்போது சினிமாவில் இருந்து சற்று விலகி அரசியலில் களமிறங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். நடிகை ரோஜா இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை ரோஜாவின் குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை ரோஜா குடும்பத்துடன் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், அதனைக் கண்ட நெட்டிசன்கள் ரோஜாவிற்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.