திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#HBD Sayyesha: சாக்லேட் பேபி சாயிஷாவுக்கு இன்று குவா., குவா.. டே..! குவியும் வாழ்த்துக்கள்..!
தமிழ் திரைகளில் பிரபல நடிகையாக வலம்வருபவர் சாயிஷா. இவர் முதன்முதலாக தெலுங்கு மொழியில் வெளியான "அகில்" திரைப்படம் மூலமாக கடந்த 2015-ஆம் வருடம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து அஜய்தேவகனின் சிவாய திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஹிந்தி மொழியில் வெளியானது. இதன்பின் தமிழ் மொழிக்கு பரீட்சியமான சாயிஷா "வனமகன்" திரைப்படம் மூலமாக கடந்த 2017 ஆம் வருடம் தமிழ்துறையில் நுழைந்தார்.
கனடாவில் யுவர்த்தனா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். தமிழில் சாயிஷா கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி போன்ற படத்திலும் நடித்துள்ளார்.
இவரும் நடிகர், ஆர்யாவும் காதலித்து வருவதாக பல கிசுகிசுக்கள் வெளியான நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை இவர் திருமணம் செய்துக்கொண்டார். தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் ஒரு அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது.
இந்த நிலையில், இன்று நடிகை சாய்ஷாவுக்கு பிறந்தநாள் என்பதால் திரையுலகினர் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.