மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே நாளில் சுக்குநூறான கனவு கோட்டை.! வேதனையில் கண்கலங்கிய நடிகை சதா!!
தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதை பெருமளவில் கவர்ந்தவர் நடிகை சதா. முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து சதா எதிரி, வர்ணஜாலம், திருப்பதி, பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்து பிரபலமாக இருந்த சதாவிற்கு சமீப காலமாக பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அவர் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சதா பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நேர்ந்த கஷ்டமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, மும்பையில் நான் காபி ஷாப் ஒன்றை ஆரம்பித்தேன். அங்கு நாற்காலி முதல் முன்பு வைத்திருந்த செடி வரை ஒவ்வொன்றையும் நானே பார்த்து பார்த்து செய்தேன்.அங்கு அனைத்தும் சைவப் பொருட்களே விற்பனை செய்யப்பட்டது. பொருள்கள் அனைத்தும் நன்கு விற்பனையாகி பிசினஸ் கை கொடுத்த நிலையில் திடீரென்று கடையை வாடகைக்கு கொடுத்தவர் இன்னும் 30,40 நாட்களில் கடையை காலி செய்ய வேண்டும் என கூறினார்.
நான் எவ்வளவோ அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தும் அவர் கேட்கவில்லை.பின் கடையில் உள்ள ஒவ்வொரு பொருட்களையும், விற்றுவிட்டு காலி செய்தேன். கடைசியாக பொருளை விற்கும் போது கண்கலங்கினேன் என வேதனையுடன் கூறியுள்ளார்.