மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அண்டங்காக்கா கொண்டகாரி" நடிகை சதாவின் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்.!
2002 ஆம் ஆண்டு தெலுங்கு "ஜெயம்" திரைப்படத்தின் இயக்குனர் தேஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சதா. தெடர்ந்து பிராணம், நாகா போன்ற தெலுங்கு படங்களில் நடித்த சதா, 2003ம் ஆண்டு தமிழில் எடுக்கப்பட்ட "ஜெயம்" திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து வந்த சதா, தமிழில் எதிரி, அந்நியன், வர்ணஜாலம், ப்ரியசகி, திருப்பதி, நான் அவள் அது, உன்னாலே உன்னாலே, புலிவேஷம் , எலி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும் விஜய் டிவியின் ஜோடி நம்பர்.1 நிகழிச்சி மற்றும் தெலுங்கில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்றுள்ளார் சதா. சமீபகாலமாக வைல்ட் லைப் போட்டோகிராபியில் கவனம் செலுத்தி வருகிறார். விலங்குகளை படம் பிடித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
தற்போது தனது புகைப்படங்களையும் பதிவிட்டு வரும் சதா, தற்போது அனிமல் பிரிண்ட் ஆடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அவை தற்போது வைரலாகி வருகின்றன.