மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாவணி பாவாடையில் ஜொலிக்கும் ஜெயம் நாயகி.! இப்பவும் எப்படி இருக்காங்க பார்த்தீங்களா!!
ஜெயம் நாயகி சதா
தமிழ் சினிமாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சதா. ஹோம்லியாக நடித்து தனது முதல் படத்திலேயே அவர் ரசிகர்கள் மனதை பெருமளவில் கொள்ளை கொண்டார். அவருக்கு ரசிகர்களும் உருவாகினர்.
நடித்த படங்கள்
அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்த நிலையில் நடிகை சதா எதிரி,வர்ணஜாலம், பிரியசகி, திருப்பதி, அந்நியன், உன்னாலே உன்னாலே, திருப்பதி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் ஹோம்லியாக நடித்த அவர் கவர்ச்சியிலும் இறங்கி தாராளம் காட்டியிருந்தார். நடிகை சதா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
கொள்ளை அழகில் போட்டோஷூட்
தற்போது அவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார். வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட அவர் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வார். மேலும் அவ்வப்போது அசத்தலாக போட்டோ ஷூட் நடத்தி அதனையும் பகிர்வார். இந்த நிலையில் நடிகை சதா தாவணி பாவாடையில் கலக்கலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.