மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி விஜய்யுடன் லிப்லாக்! பிரபல நடிகையின் அத்துமீறும் ஆசையால் ஷாக்கான ரசிகர்கள் ! யார் அந்த நடிகை பாத்தீர்களா?
தமிழ் சினிமாவில் ஆயிரத்தில் இருவர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சாக்ஷி சவுத்ரி.தெலுங்கு நடிகையான அவர் அங்கு ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து அவர் தற்போது வி.இசட்.துரை இயக்கும் இருட்டு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் தலை காட்டத் துவங்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சுந்தர்சி ஹீரோவாக நடிக்கிறார்.
மேலும் வரும் 11ம் தேதி இந்த இருட்டு திரைப்படம் வெளிவர உள்ளது. இந்த திரைப்படத்தில் சாய் தன்ஷிகா விடிவி கணேஷ், விமலாராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இருட்டு திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ள சாக்ஷி சவுத்ரி தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரிடம் யாருடன் உங்களுக்கு லிப்லாக் சீனில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது எனக் கேட்டதற்கு, அவர் தளபதி விஜய்யுடன் லிப்லாக் காட்சியில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளார். மேலும் சர்ச்சையான இவரது பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.