மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தெலுங்கு பட நடிகரும் சமந்தாவும் காதலா..! சமந்தா விவாகரத்திற்கு இந்த நடிகர் தான் காரணமா .!?
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் தொடர்ந்து ஹிட் படங்களை குடுத்து முன்னி நடிகையாக இருப்பவர் தான் சமந்தா. இவர் தெலுங்கில் 'ஏ மாயா சேசவா' என்ற திரைபடத்தில் நடித்தார். முதல் படத்திலயே வெற்றி கண்ட சமந்தா பிலிம் பேர் விருதை பெற்றார். இதன் பிறகு தெலுங்கில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.
மேலும் கோலிவுட் திரையுலகில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'பானா காத்தாடி' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார். இதனை தொடர்ந்து மாஸ்கோவின் காவிரி, நடுநிசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்.வசந்தம், கத்தி, தெறி தங்க மகன், என பல வெற்றி படங்களில் நடித்து ஹிட் நடிகையாக வலம் வந்து மக்கள் மனதை கவர்ந்தார்.
இத்தகைய நிலையில், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும், சமந்தாவும் காதலிப்பதாக கிசுகிசு வந்த நிலையில் 2017ஆம் வருடம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகு இவர்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விவாகரத்தாகியது. இதுகுறித்து நாக சைதன்யா, சமந்தா இருவருமே சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதன் பின், தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி 2 படத்தில் கதாநாயகியாக நடித்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் விஜயும், சமந்தாவும் காதலிப்பதாக பேசப்பட்டு வருகிறது. படப்பிடிப்பின் போது இவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். சம்ந்தாவின் விவகாரத்திற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசிக் கொள்கின்றனர்.