#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அந்த ஹிட் பாடலில் நடனமாடும் போது ரொம்ப பயமாக இருந்தது" மனம் திறந்து பேசிய சமந்தா.!?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியான நடிகையாக இருந்து வந்த சமந்தா, தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனமுறிவு ஆனது. இதன் பின்னர் மயோசைட்டிஸ் எனும் நோய் பாதிப்பினால் சிகிச்சை எடுத்து வந்தார்.
இதனால் வெளிநாடுகளுக்கு தொடர்ந்து சிகிச்சைக்காக சென்று வந்த சமந்தா, படங்களில் நடிப்பதில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக் கொண்டார். இறுதியாக தெலுங்கில் குஷி திரைப்படத்தில் 2023 ஆம் வருடம் நடித்திருந்தார். ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
மேலும் சமூக வலைத்தளங்களிலும், ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனை அடுத்து புஷ்பா படத்தில் ம் சொல்றியா மாமா என்ற பாடலில் கவர்ச்சி நடனமாடி இருந்தார். இப்பாடலை குறித்து சமீபத்தில் பேசியிருந்த சமந்தா இந்த பாடலில் நடனமாடிய போது மிகவும் பயமாக இருந்தது. அதையும் மீறி இப்பாடல் சூப்பர் ஹிட்டானது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று பேசி இருந்தார்.