மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"விரைவில் இதை கண்டிப்பாக செய்வேன்" நடிகை சமந்தாவின் பதிவு.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ஹிட் திரைப்படங்களை அளித்துள்ளார்.
இவ்வாறு சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்து வந்த சமந்தாவிற்கு மயோசைட்டிஸ் எனும் அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்ட செய்தி இணையத்தில் பரவியதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த நோய்க்காக பல நாடுகளுக்கு சென்று தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார் சமந்தா.
இவ்வாறு சிகிச்சைக்காக அமெரிக்கா, தென்கொரியா போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டியது இருப்பதால் சினிமாவில் இருந்து சில வருடங்கள் விலகப் போவதாக இணையத்தில் பதிவிட்டார். இச்செய்தி சமந்தா ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக யசோதா, குஷி, சாகுந்தலம் போன்ற திரைப்படங்கள் நடித்திருந்தார்.
ஆனால் இப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல்ரீதியாக தோல்வியை அடைந்தது. இதனை அடுத்து சமந்தா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படவைப்பார் தற்போது சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரைவில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பேன் என்று பதிவிட்டு இருக்கிறார். இப்பதிவை பார்த்து ரசிகர்கள் அவரது உடல் நிலையை விசாரித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.