மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காமெடி நடிகருடன் செல்ஃபி எடுத்த நடிகை சமந்தா!! வைரலாகும் புகைப்படம் இதோ..
தென்னிந்திய சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது சமந்தா கைவசம் சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய படங்கள் உள்ளன. இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகரும், பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
விவாகரத்திற்கு பிறகு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகை சமந்தா தற்போது யசோதா படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து அப்டேட் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் அல்லது தனது சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் தற்போது பிரபல காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் . இதோ அந்த புகைப்படம்....