மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முக்கியமான நாளில், தன் காதல் கணவருக்கு வாழ்த்து கூறிய நடிகை சங்கீதா.! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
1998 ஆம் ஆண்டு நடன கலைஞராக அறிமுகமாகி, 2018 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் ரெடின் கிங்ஸ்லி. அதனை தொடர்ந்து அவர் டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், ஜெயிலர் மற்றும் சமீபத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது எதார்த்தமான நடிப்பால் பலரையும் கவர்ந்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும் அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று ரெடின் கிங்ஸ்லி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது கணவருக்கு வாழ்த்து கூறி அழகிய புகைப்படங்களுடன் நடிகை சங்கீதா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கணவராக நீங்கள் என் மீது காட்டிய அன்பு, அக்கறையை நான் மறக்க மாட்டேன். நீங்கள் இதுபோன்ற நிறைய பிறந்த நாட்களை கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.