மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் குழந்தையுடன் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரெடின் கிங்ஸ்லி மனைவி.! அந்த பாப்பா யார் தெரியுமா?? வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் அண்ணாத்த, பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்பால், வித்தியாசமான பேச்சால் பெருமளவில் பிரபலமானார்.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி அண்மையில் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். சங்கீதா விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரும் அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
கல்யாணம், ஹனிமூன் என பிஸியாக இருந்த நடிகை சங்கீதா சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் தனது சகோதரரின் மகளுடன் காவாலா பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். தனது குட்டி மருமகளுடன் டான்ஸ் ஆடிய வீடியோவை நடிகை சங்கீதா வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.