பிரபல தமிழ் நடிகை மரணம்!! சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த திரையுலகம்.!



actress-seethalakshmi-passed-away

நடிப்புத் திறமைக்காக `தந்தை பெரியார் விருது’, கலைமாமணி, கலைச்செல்வி உள்ளிட்ட பட்டங்களையும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடம் இருந்து பெற்ற பெருமைக்குரிய பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். 

Passed away

பர்மாவில் பிறந்த சீதாலட்சுமி, பின்னர் தமிழகம் வந்து, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ள இவர் சினிமாவில் மட்டுமின்றி நாடகங்களிலும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்டோருடன் நடித்தார்.

Passed away

எம்.ஜி.ஆர் நடித்த `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் நம்பியாரின் சகோதரியாக நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். மேலும்,`அன்னமிட்ட கை', `ஆண்டவன் கட்டளை', `தாய் மேல் ஆனை', `அன்புக் கரங்கள்', `கர்ணன்', `வீரபாண்டிய கட்டபொம்மன்', ரத்தக் கண்ணீர்', ரஜினிகாந்த் உடன் `அன்புக்கு நான் அடிமை', தனுஷ் உடன் `சீடன்',  இந்தியில் திலிப் குமாருடன் `இரும்புத் திரை'  உட்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Passed away

கடந்த சில நாள்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சீதாலட்சுமி. இந்நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இவரது மகள் ராதிகா, தமிழ் சினிமாவில் நடன இயக்குநராகப் பணியாற்றிவருகிறார்.