திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா.. அந்த படத்தில் நடிக்க சீதா ராமம் பட ஹீரோயினுக்கு இவ்வளவு சம்பளமா? வாயடைத்துபோன ரசிகர்கள்!!
பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து ஹிட்டான திரைப்படம் சீதா ராமம். பான் இந்தியா திரைப்படமாக உருவான இந்த படத்தை இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக நடித்து இந்தியளவில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு பிரபலமானவர் மிருணாள் தாகூர்.
மேலும் ஒரு படத்தின் மூலம் அவர் டாப் ஹீரோயின்களுக்கு இணையாக முன்னேறினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பல மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர் தமிழில் சூர்யாவின் 42-வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
மேலும் அவரை தமிழில் மற்றுமொரு படத்தில் நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். நடிகை மிருணாள் தாகூர் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த படத்திற்காக அவர் ரூ.6 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறுகிய காலத்திலேயே மிருணாள் தாகூர் பெரிய தொகையை சம்பளமாக வாங்கியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.