மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளி 5; புதிய கோமாளியாக என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகள் ஏராளம். அவ்வாறு மக்கள் மனதை கவர்ந்த நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. சமையல் திறனை ஊக்குவித்து, அதையே ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்கும் வகையில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம்.
இந்த நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசனுக்காக ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 4 சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் திடீரென்று வெளியேறினார். அவரை தொடர்ந்து தற்போது புது நடுவராக மாதம்பட்டி ரங்கராஜன் என்ட்ரி கொடுக்கிறார்.
மேலும் இந்த சீசனிலும் கோமாளியாக பாலா கலந்து கொள்ளபோவதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சீசனில் புதிய கோமாளியாக நடிகை ஷபி ஷப்னம் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் தாரணி கேரக்டரில் நடித்தவர். தொடர்ந்து ராஜாராணி சீசன் 1, பொம்முகுட்டி அம்மாவுக்கு போன்ற சீரியல்களில் நடித்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலிலும் நடித்து வருகிறார்.