#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"என்னால சிகரெட் அடிக்காம இருக்க முடியாது" பிரபல நடிகை சகிலாவின் சர்ச்சையான பேட்டி.!
மலையாளம் மற்றும் தமிழ் போன்ற திரைத்துறைகளில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஷகீலா. குணசித்திர கதாபாத்திரங்களிலும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். ஆரம்ப கால கட்டத்தில் ஆபாச திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகையாக அறியப்பட்டு வந்தார்.
இவர் முதன்முதலில் 2003 ஆம் வருடம் வெளியான 'ஜெயம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இதன் பின்பு தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார் ஷகிலா.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறைந்த நாட்களிலேயே வெளியேறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட சகிலா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை பற்றி பேசியிருந்தார். அவர் கூறியதாவது, "தெலுங்கு பிக் பாஸில் எவ்வளவு சிகரெட் கேட்டாலும் கொடுப்பாங்க. நான் ஒரு செயின் ஸ்மோக்கர். என்னால சிகரெட் அடிக்காம இருக்கவே முடியாது. பிக் பாஸை மிரட்டி தான் நான் சிகரெட்டு வாங்குவேன்" என்று கூறியிருக்கிறார். இப்பேட்டி தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.