திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாரம்பரிய உடையில் குடும்பத்துடன் கோலாகலமாக தீபாவளியை கொண்டாடிய நடிகை ஸ்ரேயா... வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்!!
தெலுங்கில் வெளியான இஷ்டம் என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண். தமிழில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் விஜய், ரஜினி, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஏராளமான சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஷீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய மகள் உள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வித்தியாசமான உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது பாரம்பரிய உடையில் குடும்பத்துடன் கோலாகலமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.