திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தேவதை சார் அவ.! சித்தி இத்னானியின் இணையத்தை தீ பிடிக்க வைக்கும் புகைப்படங்கள்.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் சித்தி இத்னானி. இவர் தமிழில் முதன்முதலில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரும் வெற்றியடைந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. மேலும் சித்தி இத்னானியின் நடிப்பும் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
இதன் பின்னர் ஆர்யா நடிப்பில் வெளியான 'காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனது நடிப்பு திறமையாலும், அழகினாலும் ரசிகர்களைக் கவர்ந்து தமிழ் திரை துறையில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார்.
மேலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி சினிமாவிலும் கவனம் செலுத்தி வரும் சித்தி இத்னானி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருந்து வருகிறார். அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகாகவும், கவர்ச்சியாகவும் போட்டோஷூட் செய்து அதனை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தேவதை மாதிரி இருக்கீங்க என்று ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர். தொடர்ந்து தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பிசியான நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.